அஜித்துடன் இருக்கும் உறவு மற்றும் திருப்பாச்சி யாருக்காக :
மரண மாஸ் குடும்பப்படங்கள் தல தளபதியை வைத்து கொடுத்தவர் இயக்குனர் பேரரசு! சமீபத்தில் இவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு இவர் கொடுத்த பதில்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. திருப்பாச்சி படம் விஜய்’காக எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை தல அஜித் நடித்திருக்க வேண்டிய படம் அது ஆஞ்சநேயா படம் ஷூட்டிங் நடக்கும்போது அஜித்தை சந்தீத்தேன் அஜித்’ம் நானும் குடும்ப நண்பர்கள் ஷாலினி ‘க்கு தாய் மானான் போல் நான். அஜித் குடும்ப விழாக்கள் அனைத்திற்கும் என்னை அழைப்பார் சமீபத்தில் கூட அவரது மகன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றேன்.

திருப்பாச்சி கதை அஜித்திடம் சொன்னேன் :
அது குடும்ப விஷயம்.. குடும்பம் வேறு தொழில் வேறு என்பதால் குடும்ப விழாக்களிலோ அல்லது வீட்டில் நண்பராகவோ படம் பண்ணலாம்னு பேச மாட்டேன். ஆஞ்சநேயா படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தீது கதை கூறினேன் கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது. ஆஞ்சநேயா முடியட்டும் அடுத்து நாம படம் பண்ணலாம் கதை பிடிச்சிருக்குனு சொன்னாரு. அதற்குள் நான் ஏற்கினவே சூப்பர் குட் நிறுவனத்திடம் பேசிருந்தேன் அவர்கள் இந்தநேரம் பாத்து கூப்டு விஜய் கால் சீட் இருக்கு விஜய்’இடம் கதை சொல்லுங்கனு சொல்லிட்டாங்க. இருந்த ஒரு கதை இதுதான். சரினு போய் சொல்லிட்டேன் அவருக்கும் புடிச்சிப்போய் படப்பிடிப்பை தொடங்கிட்டோம்.

இதை பத்தி அஜித் ஒன்றுமே சொல்லல. திருப்பாச்சி ரிலீஸ் ஆனதும் முதல் நாள் படம் பாத்துட்டு நல்ல இருக்குனு சொல்லி சந்தோஷப்பட்டாரு. திருப்பாச்சி படத்துல ஒரு காட்சில நீங்க நடிச்சிருப்பீங்களே என்ற கேள்விக்கு பேரரசு சொன்னது
மாஸ் வசனம் மாஸா யாரையாசி பேச சொன்னாரு விஜய் :
” கில்லி சம்திங் சொல்லி வசனம் வரும் அத நான் பண்ணேன் அந்த படத்துல அந்த வசனத்தை விஜய் கிட்ட சொல்லும்போதே அவரு கேட்டாரு இத யாரு பேச போறான்னு. நான் யாரையாச்சி நடிக்கவைக்கலாம்னு பாத்தா யாருமே இல்ல. விஜய் வேற நல்ல பேசுற ஆள பேசவைங்க’னா செமையா இருக்கு இந்த பன்ச்’னு சொல்லிட்டாரு சரி நாமளே பேசிருவோம்னு பேசி நடிசிட்டேன் அத அவரு டப்பிங்கில் தான் பாத்தாரு பாத்துட்டு ஒரு ரியாக்ஷன் கொடுத்தாரு. இந்த ட்ரைலர்’ல கண்டிப்பா போடுங்கனு சொன்னாரு ”

விஜய் அஜித் சந்தீப்பு :
அதுக்கப்புறம் திருப்பதி படம் தல அஜித்தை வைத்து எடுத்தேன்! படம் பூஜை அப்போ விஜயயை அழைத்தேன் படத்தின் பூஜைக்கு. விஜய் வரேன்னு சொல்லிட்டாரு .. இந்த விஷயத்தை அஜித்திடம் சொன்னேன் ” நெஜமாவா உண்மைலேயே வாராரா ” என்று ஆச்சரியமா கேட்டாரு.. அதுக்கப்புறம் படம் வேலைகள் நல்ல போய்கிட்டு இருந்துச்சி. அதுல ஒரு சீன் வரும் ” முகத்துல ரத்தம் பூசிக்கிட்டு மருத்துவமணிக்குள்ள போவாரு. அந்த காட்சி ஷூட்டிங்கில என்ன கூப்டு விஜய்’க்கு சந்தனாம் பூசிட்டீங்க எனக்கு ரத்தமா ?’னு நக்கலடிச்சாரு.. அதுக்கப்புறம் படம் வெளியாகி செம போடு போட்டுச்சு 100நாள் ஒடுச்சி.
மெர்சலுக்கு முன் நான் விஜயுடன் படம் பன்னீருக்கவேண்டியது & இப்போ விஜய்க்காக வேற கதை ரெடியாகிக்கிட்டு இருக்கு :
தேனாண்டாள் தயாரிப்புல விஜய் வச்சி ஒரு படம் பண்ணுறதா இருந்துச்சி திடீர்னு கடைசி நேரத்துல பிளான் மாறிடுச்சு. அதுக்கப்புறம் சர்க்கார் படம் ஷூட்டிங் அப்போ விஜய்யிடம் ஒரு கதை சொன்னேன் ” அரசியல் அகலமா இருக்கும் ஒரு கதை ” சொன்னேன் அப்புறம் தான் தெரிஞ்சிது சர்க்கார் படமே அரசியல் படம்தான்னு. விஜய்’யும் கொஞ்சம் கேப் விட்டு அரசியல் படம் பண்ணலாம் வேற எதுனா பாருங்கன்னு சொல்லிட்டாரு இபோ விஜய்’காக வேற கதை வேலைகள் போய்கிட்டு இருக்கு. அஜித் வெச்சி படம் பண்ணலாம் நான் குடும்ப நண்பர் என்பதால அதையும் தொழிலையும் சம்பந்தப்படுத்த விரும்பல. அதுமட்டும் இல்லாம நான் யாரையும் டிஸ்டப் பண்ணமாட்டேன்.. ஆனா சீக்ரம் தல படமும் பண்ணுவோம் நேரம் வரும்..23060cookie-checkAgain Going To Direct Ajith Vijay Films – Director Perarasu

11 COMMENTS

  1. Im no longer sure the place you’re getting your information, however great topic. I needs to spend some time studying much more or figuring out more. Thanks for magnificent info I was searching for this info for my mission.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here