கைதி – பிகில் இருபடங்களும் 25ம் தேதி வெளியாக முடிவெடுத்து படத்தின் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடந்துவரும்நிலையில்! இதற்க்கு பின்னணியில் நடந்ததாக கூறப்படும் விஷயம் சற்று அனைவரையும் யோசிக்கவைத்துள்ளது!

180கோடிக்கு மேல் பணம் போட்டு தளபதி விஜய் அவர்களின் பிகில் படத்தை தயாரித்துவிட்டு புது அலுவலகத்துக்கு பால் காச்ச கத்துக்கிட்டு இருக்கும் தயாரிப்பாளருக்கும்!

45கோடி செலவில் தரமான இயக்குனரை வைத்து, கார்த்தி அவர்களின் கைதி படத்தை தயாரித்துவிட்டு ஜம்முனு கால் மேல் கால்போட்டு கொண்டு சிறு குழந்தைகளை கிள்ளி’விட்டு அழுகையை ரசித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கும்!

நடந்ததாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டுவறுவது!

சில தினங்களுக்கு முன்பு விஜய்சேதுபதியின் சங்க தமிழன் படமும் தீபாவளி விருந்தாக வரவிருந்தது! அப்போது 180கோடி தயாரிப்பாளர் 45கோடி தயாரிப்பாளரையும் 42கோடி தயாரிப்பாளரையும் சந்தித்து ” மிக பெரிய செலவில் மிக பெரிய ரிஸ்க் எடுத்து படமெடுத்துள்ளதாகவும், மூன்று படமும் ஒன்றாக வந்தால் திரையரங்கு சிக்கல் வரும்! அப்படி நடந்தால் நாம் மூவருக்கும் மிக பெரிய நஷ்டம் ஏற்படும்! எனவே நாங்கள் 180கோடி படத்தை முதலில் வெளியிடுகிறோம், நீங்கள் நவம்பர் மாதம் தனி தனியாக வெளியிடுங்கள் என்று கேட்க, 45கோடி தயாரிப்பாளர் படத்தில் பிரியாணி சாப்பிடும் காட்சிகள் இருப்பதால் ரசிகர்களுக்கு தீபாவளி அன்றுதான்! ட்ரீட் கொடுக்கமுடியும் என்று உறுதியாக நிற்க, வேறுவழியின்றி பந்து 42கோடியிடம்  நகர்ந்தது, அதை உதைத்து விளையாட மனமில்லாமல் தீபாவளி போட்டியிலிருந்து விலகியது சங்க தமிழன்!

சரி வேறுவழி இல்லை 45கோடியும் தீபாவளிதான் வருவோம் என்பதால், வேறு யோசனை கொடுத்ததாம் 180கோடி, அதாவது படம் வெளியாகும் முதல் நான்கு நாட்க்கள் 180கோடியை அதிகம் திரையரங்குகளில் வெளியிடுகிறோம், அதில் ஓரளவு லாபம் பார்த்துவிடுவார்கள் விநியோகஸ்தர்கள் பின்பு 5நாட்கள் கழித்து திரையரங்கு எண்ணிக்கையை கைதி’க்கு அதிகரித்துவிடுவோம் என்று ஓட்டாராம் பிடித்த 180கோடிக்கு கிறீன் சிக்கினல் காமித்தது டிவிட்டரில் கீரிப்பிள்ளைகளை கிள்ளி விளையாடும் கிளி பிள்ளை 45கோடி!

48291cookie-checkபந்து நகர்ந்தது! – #ProviIndustryEpisode01

19 COMMENTS

  1. I’ve been browsing online greater than three hours nowadays, but I by no means discovered any fascinating article like yours. It is pretty price enough for me. In my opinion, if all webmasters and bloggers made just right content material as you did, the net might be much more useful than ever before.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here