வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் படம் வலிமை! இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது! படப்பிடிப்புத்தளத்தில் இருந்து ஒரு புகைப்படமும் வெளியாகாமல் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் நடக்கவிருக்கிறது அதுவும் சென்னையில்! ( கோகுலம் ஸ்டுடியோவில் ). இதற்காக ஒரு பிரமாண்ட சிறைச்சாலை செட் ஒன்றை உருவாகியுள்ளது படக்குழு! இதில் தல அஜித் காட்சிகளுக்கு வேலை அதிகம் இல்லை எனவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது! அதன்படிப்பார்த்தால் தல அஜித் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அதிகம் இருக்கமாட்டார் என படக்குழுவை சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்! 

மேலும்! படத்தில் தல அஜித் கெட்டபை இதுவரை யாராலும் கணிக்கமுடியாதபடி வினோத் அவர்களின் சித்துவிளையாட்டுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது! ஒருவேளை சமீபத்தில் வெளியான வேதாளம் வேடம் என்றால்! அதை என் இன்னும் மறைத்துவைக்கவேண்டும் ? என்ற கேள்விதான் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது! 

ஜனவரி முதல் ரசிகர்களுக்கு படக்குழு விருந்தளிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது!

240220cookie-checkவலிமையின் உச்சத்தில் தல அஜித்! – #ProviResearch

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here