2010’ல் வெளியான ஸ்பானிஷ் திரைப்படம் Pointblank. இந்தபடத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வந்திருக்கிறது சியானின் கடாரம்கொண்டான். கதை , திரைக்கதையில் எந்த மாற்றங்களும் இல்லை. அதுவே மிகபெரும் ஆறுதல். Pointblank சீட் எட்ஜ் திரில்லர் வகையை சார்ந்தது. அதே போல் தமிழிலும் படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்பு ஆரம்பித்து விடும். படத்தை தமிழுக்கு மாற்றியதில் அதன் பின்னணியை மலேசியாவுக்கு மாற்றியது சூப்பர் ஐடியா. கதையின் தன்மை அடித்தட்டு ரசிகனுக்கு புரியாமல் போகும் அபாயம் அதிகம் இருக்கிறது..
படத்தை தமிழில் மேம்படுத்துகிறேன் பேர்வழி என எந்தக் கோக்குமாக்கும் செய்யாமல் எடுத்ததே ஒரு செம பரபர திரில்லர் அனுபவத்தை தருகிறது. ஆனால், படத்தில் பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள் ( நம்மாளுங்க தல நடித்தால்தான் லாஜிக் குறை கூறுவார்கள் சோ நாம அத ஆராய வேண்டாம் ). ஊர் முழுவதும் தேடப்படும் குற்றவாளி போலீஸ் நிலையத்திற்குள் சர்வசாதரணமாக நுழைவது எப்படி? விக்ரம் உண்மையில் யார்தான்? அவர் என்ன தான் செய்கிறார்?? பயணமே செய்யக்கூடாத கர்ப்பிணி 10 நாட்கள் முன்பாக தான் மலேசியா வந்திருக்கிறார் எப்படி? என பல கேள்விகளுக்கு படத்தில் விடை புளூ சட்டை தான் கூறவேண்டும். கேரக்டர்களின் பின்னணி சரியாக தெளிவுபடுத்தவே இல்லை..
Pointblank அதன் பரபரப்புக்காக பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றது . அதில் உச்சம் கொரியன்-பதிப்பு. உணர்வுகளை மிகமுழுமையாக கடத்தும். கடாரம்கொண்டானில் அது கொஞ்சம் மிஸ்ஸிங். முழுமையாக எந்த கேரக்டர்களின் உணர்வுகளும் கடத்தப்படாமல் படம் மட்டும் ஆக்‌ஷன் மிகஅதகளமாக இருப்பது பார்வையாளர்களை சற்று குழப்பும். ஆக்சன்பட விரும்பிகள் மட்டும் ரசிப்பார்கள்.
சியான் விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டைலீஷ் ஆக்‌ஷனில் கலக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். பாதி நேரங்களில் டயலாக்கை கண்கள் பேசிவிடுகிறது . அக்‌ஷராஹாசன் தன் பாத்திரத்தை மிகவும் அழகாக செய்துள்ளார். அபி இதில் முக்கியமான கதாபாத்திரம். ஆனால் அவரிடம் நிறைய தடுமாற்றம் இருக்கிறது. சரிசெய்து கொண்டால் அடுத்த படங்களில் உதவும்.
இயக்கியவர் ராஜேஷ் எம் செல்வா அவர் இயக்கிய முதல் படத்திலே கமல்ஹாசன் இரண்டாவதில் சியான் விக்ரம். இரண்டுமே பக்கா ஆக்‌ஷன் தழுவல்கள். இந்தப் படத்தில் பல இடங்களில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை சரி செய்து, திரைக்கதையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். தமிழுக்கு எனும் போது தமிழின் அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்றவாறு செய்திருக்கலாமே. இரண்டு படங்களிலும் தெரியும்-எலைட் தன்மை அடிமட்ட ரசிகனை அந்நியப்படுத்துவது நிச்சயம்.
அடுத்த படத்தில் சரி செய்து கொள்வாராக! ஜிப்ரான் வழக்கம் போல் விளையாடியிருக்கிறர். படத்தின் பி-ஜி-எம் தாறுமாறு. அவர் பெயரை அழுத்திச் சொல்கிறது. பிரவீன் கே எல் எடிட்டிங் தேவையானவற்றை கூட கட் செய்து ஓடுகிறது. ஏன் இந்த அவசரம் எனக் கேட்க தோணும். ஶ்ரீனிவாஸ் கேமரா ஆகஷன் காட்சிகளில் மட்டுமில்லாமல் படம் முழுக்க செம ஓட்டம் ஓடியிருக்கிறது. ஆக்‌ஷன் படம் ஆனால் எந்த ஒரு ஆக்‌ஷன் காட்சியும் மனதில் சரியாக நிற்கவில்லை. முழுமையான திருப்தித்தராத ஆக்சன் திரில்லர் தான் கடாரம்கொண்டான்..

படம் வெற்றிக்கு காரணம் : சியான் விக்ரம், ஓடிக்கொண்டே இருக்கும் சர சர திரைக்கதை.22500cookie-checkKadaaramKondaan (கடாரம் கொண்டான் ) – ProView

30 COMMENTS

  1. Greetings! This is my first visit to your blog!
    We are a collection of volunteers and starting a new project in a community
    in the same niche. Your blog provided us valuable
    information to work on. You have done a outstanding job!

  2. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here