பைபிளில் இருந்து தழுவப்பட்டு உருவாக்கப்பட்ட குழந்தைகள் கதை தான் இந்த ” தி லயன் கிங் “. பல்வேறு வடிவங்களில் உலகமெங்கும் மீளுரு செய்யப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இப்போது டிஸ்னி தயாரிப்பில் ஆயிரம் கோடி செலவில் அனிமேஷன் வடிவம் கண்டிருக்கிறது. உலகம் முழுக்க குழந்தைகள் அதிகமுறை கேட்ட பழைய கதை தான். அதை மீண்டும் இக்கால தொழில்நுட்பத்தில் கொண்டு உருவாக்கி வந்திருக்கிறார்கள். உலகம் அந்தந்த மொழிகளில் வெளியிட்டிருக்கிறார்கள். இம்முறை அந்தந்த மொழிகளில், தன்மை மாறாமல் அவர்கள் வட்டார வழக்குடன் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்..
அதனாலே இத்தனை பிரபலங்கள் இங்கே குரல்தந்திருக்கிறார்கள். “தி லயன் கிங்” படம் ஆரம்பிக்கும்போதே நம்மை ஒரு உண்மையான அழகான காட்டுக்குள் அழைத்து சென்று விடுகிறது. முழுக்க நாம் விலங்களோடு ஒரு பயணம் போய் வந்தது போல் ஜாலியா இருக்கிறது இந்தப்படம். மிக ஏளிமையான முதல் பாகுபலி கதை, குழப்பாத நேர்கோட்டு திரைக்கதை. அசரவைகும் சிஜி வேலைகள், என ஒரு புது அனுபவத்தை தருகிறது இந்த படம். சிங்கங்கள், குரங்குகள், பன்னி, ஒட்டகச்சிவிங்கி, மான் என படத்தில் வரும் பல அத்தனை மிருகங்களும் அனிமேஷன் என்பதை நம்பவே முடியவில்லை.

அவ்லோ துல்லியம். சிங்க்கத்தின் பார்வையில், அசைவில் எப்படி இத்தனை உணர்வுகளை கொண்டு வந்தாரகள் என வியக்க வைத்திருக்கிறார்கள் வியந்தோம். குழந்தைகளுக்கு ஒரு குதூகல கொண்டாட்டமாக இப்படம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆங்கிலத்தில் அனிமேஷன் படங்களுக்கு பிரபல நடிகர்கள் குரல் தருவாரகள் அது போல் இங்கும் இம்முறை தந்திருக்கிறார்கள். முதல் டயலாக்காக மரங்கொத்தி நம்ம ” மனோபாலா ” பேசும்போதே நாம் ஒரு தமிழ் படம் பார்க்கிறோம் எனும் உணர்வை சிரிப்போடு ஏற்படுத்தி விடுகிறார்கள். ஸ்கார் சிங்கமாக கலக்கியிருக்கிறார் நம்ம அரவிந்த் சாமி அந்த குரோதத்தையும், வஞ்சத்தையும் தன் குரலில் அசத்தலாக கொண்டுவந்திருக்கிறார்.
சிம்பாவாக நம்ம “சித்தார்த்” குரல் செம அழகு. அவர் மட்டும் தான் பாடல்களையும் தானே செமையாக பாடியுள்ளார். மற்றவர்கள் பாடல் வரும்போது மட்டும் வேறு சிலர் குரல்கள் வருவது கொஞ்சம் நெருடல். பொதுவாய் ஆங்கிலத்தில் குரல் கொடுப்பவர்களே பாடவும் செய்வாரகள். நம் நடிகர்களுக்கு வராதது வருத்தமே டிமோனாக “சிங்கம்புலி“, பும்பாவாக ரோபோ சங்கர் இந்த இரு கூட்டணி தான். படத்தின் நகைச்சுவைத் தூண். சிங்கம்புலியின் டைமிங்க் காமெடிகள் அசரடிக்கிறது. அவருக்கு அமைந்திருக்கும் பஞ்ச்கள் அனைத்தும் அட்டகாசம். “பும்பா பன்னியிலேயே நீ ஒரு சிங்கம்டா” எனும் வசனம் வரும்போது தியேட்டர் அதிகிறது.

‘இந்த தண்ணியில்லாத காட்டுக்குத்தான் இத்தன சண்டையா’ என வசனங்கள் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை இவர்கள். ஒவ்வொன்றும் வயிறு குலுங்க வைக்கிறது. தமிழ் வசனங்கள் மிக அற்புதமாய் வந்திருக்கிறது. பல இடங்களில் ரோபோசங்கரும்,சிங்கம் புலியும் வசனங்களை நிரப்பிக்கொண்டது போல் தெரியும் . ரோபோசங்கர் தனது மிமிக்கிரியை மீட்டெடுத்திருகிறார் வாழ்த்துக்கள். ராகிணியும், ஐஸ்வர்யா ராஜேஷிம் தங்கள் பங்க்கை மிகஅழகாக செய்துள்ளார்கள்.
அயன் மேன் இயக்குநர் ஜான் ஃபெவரு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டின் சிறந்த வெற்றிப்படமாக அமையும் அத்தனை தகுதியுடன், குழந்தைகள் கொண்டாடும் படமாக கொடுத்துள்ளார். குறை என்று சொல்ல ஒன்றும் இல்லாமல் ஆக்கி வைத்திருப்பதே, இந்த இயக்குநரின் திறமைக்கு சான்று. இசை நம் காதுகளில் படம் முடிந்தும் கேட்டுகொண்டே இருக்கிறது. ஆயிரக்கணக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலைசெய்திருக்கிறார்கள் அத்தனை பேரின் உழைப்பும், திரையின் உச்ச அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறது.

படம் வெற்றிக்கு காரணம் : தமிழ் வசனங்கள், சிரிப்புகள், தமிழ்க்குரல், அசரவைக்கும் சிஜி , பழைய ஹக்கு நம டாட்டா .

22530cookie-checkThe Lion King ( தமிழ் ) – ProView

5 COMMENTS

  1. Hi, I think your site might be having browser compatibility issues. When I look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here