சென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம்! புதுச்சேரி மாநில பாட்டாளி மாணவர் சங்கம் எச்சரிக்கை!

புதுச்சேரி யூனியன் பிரதேச பாட்டாளி மாணவர் சங்க துணை செயலாளர் ராகுல் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக சென்டாக் மூலமான மாணவர் சேர்க்கைக்கான இந்த ஆண்டு மாணவர் தேர்வு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறதா ? அல்லது பாலிடெக்னீக் நடக்கிறதா ? என்பதை சென்டர் நிறுவனம் இதுநாள்வரை தெளிவுபடுத்தவில்லை, மாணவர்களிடம் சென்டாக் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை பெறப்பட்டபோதும் அதில் பல்வேறு குழப்பங்களும் , காலதாமதமும் இருந்தநிலையில் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் இதுநாள்வரை மாணவர் சேர்க்கைக்கான முறையான பட்டியல் வெளியிடப்படவில்லை.
மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை காலதாமதம் செய்வதற்கான காரணம் புரியவில்லை, இதுபோன்ற தவறான வழிமுறைகளால் தான் கடந்த ஆண்டு பிரஞ்சு படிக்காத மாணவர்களுக்கு பிரஞ்சு பாடப்பிரிவுகளில் இடம் ஒதுக்கப்பட்டது , பல துறைகளில் இதுபோன்ற குழப்பங்கள் இருந்தன. இந்த கல்வி ஆண்டில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று நம்பியநிலையில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாள்முதல் குழப்பங்கள் தொடர்கிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவிடும்போதே தாங்கள் படிக்கவிரும்பும் பாடத்தை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சர்வர் வேலை செய்யவில்லை என சொல்லப்பட்டது.
இவை இவை அனைத்திற்கும் காரணம் தகுதியற்ற நபர்களை சென்டாக் நிர்வாக அதிகாரிகளாக நியமித்ததே என கருதுகிறோம். மவ்லும், சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்திட்டங்களை படிக்கும் வாய்ப்பு மறைமுகமாக பறிக்கப்படுவதை உணரமுடிகிறது. எனவே கூடுமான அளவிற்காவது மாணவர்கள் விரும்பும் பாடங்களை ஆராய்ந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்சேர்க்கை ஆன்லைன் வழியாக நடக்குமா ? அல்லது நேர்முகத்தேர்வாக நடக்குமா ? என்ற சந்தேகமும் எழுகிறது.சென்டாக் புத்தக பதிவேட்டில் 03.06.2019 அன்று மருத்துவத்திற்காக தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேதி முடிந்து 15நாட்களுக்கு மேல் ஆகியபிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
கடந்த 16ம் தேதி எம்.பி.பிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் முடிந்தது இருந்தாலும் தற்போதுதான் நீட் தேர்வின் மாணவர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இத்தகைய செயல் புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டுக்கொண்டிருக்க கூடிய தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக அமையும் என எமது அமைப்பு சென்டாக் நிறுவனத்தை சந்தேக்கிறத.
எனவே தொடரும் குழப்பங்களுக்கு அரசு கல்வித்துறை உரிய தீர்வு கண்டு. மாணவர் தேர்வு ஆன்லைன் மூலம் நடக்கிறதா ? நேரடி தேர்வாக நடக்கிறதா ? எந்த கல்வி வளாகத்தில் தேர்வு நடைபெறும், மாணவர்கள் சேர்க்கைக்கான தெளிவான பட்டியல் எப்போது வெளியிடப்படும் போன்ற சந்தேகங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். எமது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.18440cookie-checkசென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம்!

2 COMMENTS

  1. Thank you for your own efforts on this blog. My mum loves going through internet research and it’s really easy to see why. Almost all hear all relating to the compelling means you offer practical secrets by means of this website and in addition recommend participation from website visitors on that topic and our favorite princess is actually starting to learn a lot. Take advantage of the remaining portion of the new year. You are always conducting a stunning job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here